search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Double Bullock Cart"

    • கரட்டுப்பட்டி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    சோழவந்தான்

    கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சோழவந்தான் கரட்டுப் பட்டி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. மாநில பொது குழு உறுப்பினர் பூமிநாதன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க. மாவட்ட விவசாய அணி நிர்வாகி பாஸ்கரன், இரட்டை மாடு பந்தயக்குழு முன்னால் மாநில தலைவர் மோகன்சாமிகுமார், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பந்தயத்தில் பெரிய மாடு 7 மைல் வரை, நடுமாடு 6மைல் வரை, பூஞ்சிட்டு மாடு 5 மைல் வரை பந்தயங்கள் நடந்தது. விழாவில் ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் வாடிப்பட்டி பிரகாஷ் பிரபு மதுரை கண்ணன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் பால் கண்ணன் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமராஜபுரம் யாதவ மகாசபை மற்றும் யாதவர் இளைஞர் அணி, கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சர்மிளா, அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் குமரேசன், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் வருடா பிசேக விழாவை முன்னிட்டு 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது.

    இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசுகள் வழங்கபட்டது.

    4-ம் இடம் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களூக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கபட்டது.இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை சுற்றுவட்டார கிராமத்தினர் ஏராள மானோர் கண்டுகளித்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தி.மு.க. சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு முதல் பரிசு பெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாய கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு முதல் பரிசு பெற்றது.

    2-வது பரிசை வள்ளியூர் முத்தையா ஆனந்த் என்பவரது மாடும், 3-வது பரிசை மேல செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின், 4-வது பரிசை ஏனாதி பூங்குளத்தான் என்பவரது மாடும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. 2-வது பரிசை பூலாங்கால் சிக்கந்தர் பாட்சா என்பவரது மாடும், 3-வது பரிசை சிங்கிலி பட்டி முகுந்தன் என்பவரது மாடும், 4-வது பரிசை பூலாங்கால் அனுசுயா என்பவரது மாடும் பெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    ×