search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diplomatic Row"

    • 41 தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது
    • சர்வதேச சட்ட விதியை இந்தியா மீறியதாக கனடா விமர்சனம்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய புலனாய்வு அமைப்பிற்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்த கனடா, உயர் அதிகாரியை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இந்தியாவும் பதிலடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற காலக்கெடு விதித்தது.

    இந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுளளது. இதுபோன்று முன்னதாக நடந்தது இல்லை எனத் தெரிவித்த கனடா, சர்வதேச சட்டத்தை இந்தியா மீறியதாகவும் தெரிவித்தது.

    அதேவேளையில் இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில் ''இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ''இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

    கனடாவின் 41 தூதரக அதிகாரிகள் வெளியேறியுள்ளதால் இந்தியாவின் பல நகரங்களில், கனடா தூதரகம் இயங்காமல் உள்ளது.

    இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் ''இந்தியாவுடடான உறவை அமெரிக்கா, இங்கிலாந்து மோசமடைய விரும்பாது. ஏனென்னால் ஆசிய கண்டனத்தில் முக்கிய எதிரியாக திகழும் சீனாவிற்கு பதிலடிகொடுக்க இந்தியா அவர்களுக்கு முக்கியமான நாடாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

    • தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப்பெற்ற நிலையில் இந்த முடிவு
    • டெல்லி, பெங்களூருவில் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் இருந்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

    தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், "இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், "இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம். ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்.

    டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.

    • காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்திய புலனாய்வு அமைப்புக்கு தொடர்பு என கனடா குற்றச்சாட்டு
    • இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்ற உத்தரவிட்டதால் இருதரப்பு உறவில் விரிசல்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. அதோடு இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு, தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 41 பேரை கனடா திரும்பப் பெற்றுள்ளது.

    இந்த தகவலை கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம் என்று கூறிய அவர், இதற்கான அர்த்தம் எங்களுடைய அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தற்போது வெளியேறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    41 பேரின் தூதருக்கான விலக்கு திரும்பப்பெறுவது இதுவரையும் இல்லாத ஒன்று. மேலும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இருந்தாலும், பழிக்குப்பழி நடவடிக்கையில் இறங்கும் எண்ணம் கனடாவிற்கு இல்லை. கனடா தொடர்ந்து சர்வதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும் என்றார்.

    ×