search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற விவகாரம்: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, இங்கிலாந்து
    X

    தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்ற விவகாரம்: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, இங்கிலாந்து

    • 41 தூதரக அதிகாரிகளை கனடா அரசு திரும்பப் பெற்றது
    • சர்வதேச சட்ட விதியை இந்தியா மீறியதாக கனடா விமர்சனம்

    காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய புலனாய்வு அமைப்பிற்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரிவித்த கனடா, உயர் அதிகாரியை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. இந்தியாவும் பதிலடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளை வெளியேற்ற காலக்கெடு விதித்தது.

    இந்த நிலையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுளளது. இதுபோன்று முன்னதாக நடந்தது இல்லை எனத் தெரிவித்த கனடா, சர்வதேச சட்டத்தை இந்தியா மீறியதாகவும் தெரிவித்தது.

    அதேவேளையில் இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில் ''இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ''இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

    கனடாவின் 41 தூதரக அதிகாரிகள் வெளியேறியுள்ளதால் இந்தியாவின் பல நகரங்களில், கனடா தூதரகம் இயங்காமல் உள்ளது.

    இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுனர்கள் ''இந்தியாவுடடான உறவை அமெரிக்கா, இங்கிலாந்து மோசமடைய விரும்பாது. ஏனென்னால் ஆசிய கண்டனத்தில் முக்கிய எதிரியாக திகழும் சீனாவிற்கு பதிலடிகொடுக்க இந்தியா அவர்களுக்கு முக்கியமான நாடாக இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×