என் மலர்
நீங்கள் தேடியது "Development Schemes"
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது.
- கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.
கூடுதல் தலைமை செயலாளர் ( நகராட்சி நிர்வாகம்) சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் விஷ்ணு, குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் தட்சணாமூர்த்தி, பேரூராட்சிகள் இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் நடந்து வரும் திட்டப்பணிகள், நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் விநியோகம், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நெல்லை வந்த அமைச்சர் நேருவிற்கு தி.மு.க.நிர்வாகிகள் ஆரோக்கிய எட்வின், ஜோசப் பெல்சி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.






