search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Derek O Brien"

    • எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக காலையில் அறிவிக்கப்பட்டது.
    • ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

    மாநிலங்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் இருக்கையைவிட்டு எழுந்து ஆவேசமாக பேசினார். அவைத்தலைவர் உத்தரவிட்டும் கேட்கவில்லை.

    இதையடுதது, சபை நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார். டெரிக் ஒபிரையன் எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவித்தார்.

    டெரிக் ஓ பிரையன் அவையைவிட்டு வெளியேற வேண்டும் என கூறிய அவைத்தலைவர், அதன்பின்னர் அவையை ஒத்திவைத்தார். ஒரு மணி நேரம் கழித்து அவை கூடியபோது டெரிக் ஓ பிரையன் அவைக்கு வந்து அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் ஓ'பிரையன் மீண்டும் சபைக்குள் நுழைந்திருக்க முடியாது. டெரிக்கை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாததால் அவை நடவடிக்கையில் அவர் பங்கேற்கலாம் என அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது வேதனைக்குரியது என்றும் அவர் கூறினார்.

    • மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள்.
    • ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது.

    காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "பா.ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்களில் நீக்கப்பட்ட பகுதி மீண்டும் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார்.

    2005 மற்றும் 2014-க்கு இடையில் சீன அரசு காங்கிரசுக்கு பணம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க விரும்புகிறது என்று எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் துபே நேற்று பேசினார். பின்னர் பாராளுமன்ற செயலகம் வெளியிட்ட கடிதத்தில் துபே பேச்சின் சில பகுதிகள் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனாலும் நீக்கப்பட்ட பகுதிகளின் சில பகுதிகள் பாராளுமன்ற இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா கூறும்போது, கேள்வி நேரம் முக்கியமானது. ஆனால் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) அதில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி சபையை 12 மணி வரை ஒத்தி வைத்தார். 12 மணிக்கு பிறகு அவை தொடர்ந்து நடைபெற்றது.

    மேல்சபை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பினார்கள். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் ஆவேசமாக பேசினார். அவர் இருக்கையை விட்டு எழுந்து பேசினார். சபையின் நடவடிக்கைகளை தொடர்ந்து சீர்குலைத்ததாக கூறி அவர் மீது அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நடவடிக்கை எடுத்தார்.

    டெரிக் ஒபிரையன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை வரை கூட்டத்தொடர் நடக்கிறது.

    ஒபிரையனை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரி பியூஸ்கோயல் முன்மொழிந்தார். பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் சஸ்பெண்டு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    ×