search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Congress"

    • டெல்லி மாநில காங்கிரசுக்கு இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டார்.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையே, கடந்த இரு நாட்களுக்கு முன் தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேவேந்தர் யாதவ் ஏற்கனவே பஞ்சாப் மாநில பொறுப்பாளராக உள்ளார்.

    இந்நிலையில், டெல்லி மாநில இடைக்கால தலைவராக தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தேர்தலிலும், எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. #AAP #Congress #AjayMaken
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்து வருகிறது. அதே சமயம் பா.ஜ.க 2014-க்கு பிறகு நாட்டின் பல மாநிலங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.



    பா.ஜ.க.வின் பலத்தில் மோத முடியாமல் பல கட்சிகள் தோல்வியை தழுவின. மேலும், பல மாநிலங்களில் கூட்டணி மூலமே ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. பண பலத்தாலும், பதவி பலத்தாலுமே ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுகிறது.

    நாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க அம்மாநில பா.ஜ.க. பல வழிகளில் முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு குறைத்து அறிவித்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. அசுத்தமான அரசியல் செய்வதாகவும், மக்களை வஞ்சிக்க வேண்டாம் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தகவல் அல்ல; வெறும் வதந்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தேர்தலிலும், எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, தலைநகர் டெல்லியில் இன்று மாலை பேட்டியளித்த டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 56-57 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, 2017-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி நகராட்சி தேர்தலில் 26 சதவீதம் வாக்குகளைதான் வாங்கியுள்ளது. அதேவேளையில்,
    9.5 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    மேலும், கடந்த பொது தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றிருந்த ரஜோரி கார்டன் மற்றும் பாவனா சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

    எனவே, டெல்லியில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு சரிந்து விட்டதை இந்த இடைத்தேர்தல்கள் நிரூபித்துள்ளன. ஆம் ஆத்மி ஆட்சிமீது மக்கள் வெறுப்படைந்துள்ள நிலையில் 2019- பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #AAP #Congress #AjayMaken
    ×