search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DDCA"

    தேர்வு குழு தலைவர் அமித் பண்டாரி மீதான தாக்குதலுக்கு காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. #AmitBhandari
    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டிக்கான டெல்லி அணி வீரர்கள் டெல்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர். வீரர்களின் பயிற்சியை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 ஒருநாள் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரருமான அமித் பண்டாரி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது ஸ்டேடியத்துக்குள் வந்த 2 பேர் அமித் பண்டாரியுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

    சற்று நேரத்தில் அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் ஸ்டேடியத்துக்குள் நுழைந்து அமித் பண்டாரியை இரும்பு கம்பி, ஆக்கி மட்டை மற்றும் சைக்கிள் செயினால் சரமாரியாக தாக்கினர். அதனை தடுக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    தாக்குதலில் தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் அடைந்த 40 வயதான அமித் பண்டாரி அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்க்கப்பட்டார். தலையில் 4 தையல் போடப்பட்ட அவர் மாலையில் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்ஜார்ஜ்’ செய்யப்பட்டார். சமீபத்தில் நடந்த 23 வயதுக்கு உட்பட்ட டெல்லி அணி தேர்வில் அனுஜ் டேதா என்ற வீரர் தேர்வு செய்யப்படாததால் எழுந்த பிரச்சினையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.

    இந்த தாக்குதல் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து அமித் பண்டாரியிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அத்துடன் குற்றவாளியாக கருதப்படும் அனுஜ் டேதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட வீரருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உள்பட பலரும் டுவிட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரஜத் பாட்டியா நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தில் ஷேவாக், கம்பீர் ஆகியோரின் யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் அனுஜ் டேதாவுக்கு ஆயுட்கால தடை விதிப்போம். இந்த பிரச்சினை குறித்து டெல்லி கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து பேசினேன். இந்த விஷயத்தில் டெல்லி போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கவர்னரிடம் வற்புறுத்தினேன்’ என்றார். #AmitBhandari
    டெல்லி கிரிக்கெட் நலனிற்காக டிடிசிஏ கிரிக்கெட் கமிட்டியில் பதவியை ராஜினாமா செய்தேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #DDCA #Sehwag
    இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த கமிட்டியில் ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.

    டெல்லி கிரிக்கெட்டில் முன்னேற்றம் கொண்டு வர முக்கியமான ஆலோசனைகள் வழங்குவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மனோஜ் பிரபாகரை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.



    இந்நிலையில் சேவாக் உள்பட மூன்று பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதியே ராஜினா செய்துள்ளதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

    ‘‘டெல்லி கிரிக்கெட் வளர்ச்சி பெற ஆலோசனைகைள் வழங்குவதே கிரிக்கெட் கமிட்டியில் உள்ள எங்களுடைய பணி. ஆனால், நாளுக்கு நாள் எங்களுக்கு மற்ற வேலைகள் அதிக அளவில் வருவதால் இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாங்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தோம்’’ என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
    டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



    காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    ×