search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSK Head Coach Stephen Fleming"

    ஐபிஎல் தொடருக்கு திரும்பி மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது ஆசையாக இருந்தது என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    மேட்ச் பிக்சிங் விவகாரத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் (2016 மற்றும் 2017) ஐபிஎல் தொடரில் விளையாட தடைபெற்றது. இந்த தடை விலகியதால் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கலந்து கொண்டது. கலந்து கொண்டது அல்லாமல் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றது.

    இந்த வெற்றி தலைமை பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங்கிற்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் பிளமிங் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மிகவும் உயர்ந்த நிலையில் வெற்றியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.



    இரண்டு ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இரண்டு ஆண்டுகள் என்பது அணிக்கு மிகவும் கடினமானது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை. மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி பிறகு, போட்டிகளில் கடும் சவாலாக இருக்க வேண்டும், அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது’’ என்றார்.
    எங்களுக்கு ஒரு வெற்றிதான் தேவை என்றாலும் மெத்தனமாக இருக்க மாட்டோம் என்று ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 சீசனில் இடம்பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான். விளையாட்டிற்கு வயது ஒரு பிரச்சனையில் என்பதை நிரூபிக்கும் வகையில் அபாரமான ஆட்டத்தை அந்த அணி வீரர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    இதுவரை விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.

    ஒரு வெற்றியே போதும் என்றாலும், நாங்கள் மெத்தமான விளையாட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங் கூறியுள்ளார்.



    சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து ஸ்டீபன் பிளம்மிங் கூறுகையில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அதனால் மிகவும் அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    நாங்கள் முழு நோக்கத்துடன் விளையாடுவோம். எங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆட்டங்கள் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால், கடைசி லீக் ஆட்டங்கள் வரை செல்ல வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மெத்தமான இருக்க மாட்டோம்’’ என்றார்.
    ×