search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "communist party demonstration"

    தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பட்டத்திற்கு கிளைச்செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ரெங்கசாமி, ராஜீ, அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றை தடையின்றி வழங்க உத்திரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பகுதி செயலாளர்கள் புத்தூர் நடராஜன், சிவமணி, சிவக்குமார், அவினாசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இன்று 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் காந்திவீதி அமுத சுரபி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர்கள் சிவ குருநாதன், பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கலை இலக்கிய பெருமன்ற சிறப்பு தலைவர் ராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் சுப்பிரமணி, மாநிலக்குழு தலைவர் இன்பமொழி தனசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் பாக்குமுடையான்பட்டு ஜீவாநகர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், பொருளாளர் தனஞ்செழியன், துணை செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினர். 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    இதேபோல பாகூர், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, இந்திராநகர், உழவர்கரை மற்றும் காரைக்கால் என 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாமக்கல், எலச்சிபாளையம், எருமப்பட்டி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நாமக்கல்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கொட்டும் மழையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சுரேஷ், வெங்காடசலம், ரமேஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    எருமப்பட்டி கைகாட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாமக்கல் மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் சதாசிவம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கருப்பண்ணன், மாலா, கணேசன், ராஜ்குமார், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×