என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்"

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இன்று 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரக்குழு சார்பில் காந்திவீதி அமுத சுரபி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர்கள் சிவ குருநாதன், பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கலை இலக்கிய பெருமன்ற சிறப்பு தலைவர் ராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் சுப்பிரமணி, மாநிலக்குழு தலைவர் இன்பமொழி தனசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் பாக்குமுடையான்பட்டு ஜீவாநகர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தொகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், பொருளாளர் தனஞ்செழியன், துணை செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினர். 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    இதேபோல பாகூர், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, இந்திராநகர், உழவர்கரை மற்றும் காரைக்கால் என 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×