என் மலர்

  நீங்கள் தேடியது "collides with motorcycle"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலியானார்.
  • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  பெருந்துறை:

  பெருந்துறை காஞ்சி கோவில் ரோடு வெள்ளி யம்பாளையம் பகுதி சேர்ந்த வர் செல்வம் (வயது 68). இவர் மின் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

  இவரது மகள் கவுசிகா பெருந்துறையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வம் தனது மகளை பார்த்து விட்டு பெருந்துறை யில் இருந்து வெள்ளிய ம்பாளையம் செல்வதற்காக பேரன் கவினேஷ் (11), பேத்தி நசுதனா (4) ஆகி யோரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

  அவர் காஞ்சிகோவில் ரோடு பைபாஸ் அருகே ரோட்டை கடக்க ரோட்டோ ரத்தில் நின்று கொண்டி ருந்தார். அப்போது கோவைக்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

  இதில் மோட்டார் சைக்கி ளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  ×