என் மலர்
நீங்கள் தேடியது "civilian killed"
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லையோர கிராமத்தில் வசித்தவர் உயிரிழந்தார். #Civiliankilled #Pakfiring #RajouriLoC
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தை ஒட்டியுள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதி அருகேயுள்ள இந்திய கண்காணிப்பு சாவடிமீது இன்று பகல் 12 மணியளவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அருகாமையில் உள்ள இந்தியப்பகுதியான டீயிங் என்ற கிராமத்தை சேர்ந்த போத்ராஜ் என்பவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி போத்ராஜ் உயிரிழந்தார். பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடியாக இந்திய வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர். #Civiliankilled #Pakfiring #RajouriLoC
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாகினர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் காகாபோரா பகுதியில் உள்ள படைவீரர்கள் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
அவர்களின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், பிலால் அகமது என்ற நபரும் படுகாயம் அடைந்தனர்.
சக வீரர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MilitantsAttack






