என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் எல்லையோர கிராமவாசி பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லையோர கிராமத்தில் வசித்தவர் உயிரிழந்தார். #Civiliankilled #Pakfiring #RajouriLoC
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தை ஒட்டியுள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதி அருகேயுள்ள இந்திய கண்காணிப்பு சாவடிமீது இன்று பகல் 12 மணியளவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அருகாமையில் உள்ள இந்தியப்பகுதியான டீயிங் என்ற கிராமத்தை சேர்ந்த போத்ராஜ் என்பவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி போத்ராஜ் உயிரிழந்தார். பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடியாக இந்திய வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர். #Civiliankilled #Pakfiring #RajouriLoC
Next Story






