search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitragupta Puja"

    • பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர்.
    • விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள்.

    தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்தில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு சித்திரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

    சித்ராபவுர்ணமி நாளில் விரதமிருந்து விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள். அந்த காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், `சித்ரகுப்தன் படி அளக்க…' என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம்.

    சித்ர குப்தர் அவதார தினத்தில் அவரது கதையை படித்தாலோ கேட்டாலோ நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும். உடல் நலம் சீராக இருக்கும். சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனி சந்நதி உண்டு அங்கே ஏடும் எழுத்தாணியும் இன்ன பிற பொருளும் வைத்து முறையான பூஜையை நடத்தி பிரார்த்தனை செய்வார்கள்.

    நம்முடைய குற்றங்களை பொறுத்துக் கொண்டு நல்வாழ்வு அளிப்பார் என்பதற்காக சித்ரகுப்த பூஜை சித்ரா பவுர்ணமியில் நடைபெறுகின்றது. இந்த நாளில் செய்யும் தானம், சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

    ×