search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chikkanna govt college"

    • புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர்.
    • மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வக ங்கள், நூலகம் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவ தேர்வுகள் தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், குழுக்களை அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ள து" என்றார்.

    • முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
    • முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கான 3 ம் கட்ட கலந்தாய்வு நாளை 29-ந்தேதி நடைபெறுகிறது.இது குறித்து சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2022-23 ம் ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கான 3 ம் கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நாளை 29-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில்,ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவுக்கான தரவரிசை 1,001 முதல் 2200 வரை உள்ளவா்கள் பங்கேற்கலாம். இக்கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவா்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 பிரதி நகல்கள் எடுத்துவர வேண்டும்.மேலும் பாஸ்போா்ட் புகைப்படம் 6 மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்துடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×