search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chicken crispy fry"

    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து மொறுமொறு சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
    ரொட்டி தூள் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மாவு, உப்பு போன்றவை தேவையான அளவு
    வினிகர், சோயா சாஸ் - 1 சிறிய தேக்கரண்டி
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    தயிர் - 3 தேக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.

    இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×