search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chettipalayam"

    • கண்காணிப்பு காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    • 2 பேரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மலு மிச்சம் பட்டிக்கு நடந்து சென்றனர்.

    கோவை,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நித்தீஸ்குமார் (வயது 24). அவுடேஷ்குமார் (24).

    கடந்த வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள் செட்டிப்பாளையம் அருகே உள்ள சீராபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நித்தீஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் நிறுவனத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

    நேற்று இரவு இவர்கள் 2 பேரும் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மலு மிச்சம் பட்டிக்கு நடந்து சென்றனர். பொருட்களை வாங்கிய பின்னர் மீண்டும் குடியிருப்புக்கு செல்வதற்காக மலுமிச்ச ம்பட்டி- ஒத்தகா ல்மண்டபம் ரோட்டில் நடந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த வெள்ளை கலர் கார் வட மாநில தொழிலாளர்கள் நித்தீஸ்குமார், அவுடேஷ்கு மார் ஆகியோர் மீது ேமாதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே நித்திஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக பரிதாபமாக இறந்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவஇடத்து க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களில் அடையாளம் தெரியாத கார் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    • 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதியது.

    செட்டிப்பாளையம்:

    ஹரியானா சேர்ந்தவர் கிருஷ்னெண்டு சாட்டர்ஜி (வயது 48). இவரது மகன் நமன் சாட்டர்ஜி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவருக்கு கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். அதற்காக அங்குள்ள கார் பந்தய பயிற்சி பள்ளியில் கற்று வந்தார். இந்த நிலையில் அவர் கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கார் பந்தய பயிற்சி மைதானத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    அங்கு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல பந்தய காரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கார் திடீரென நமன் சாட்டர்ஜியின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை, இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நமன் சாட்டர்ஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    செட்டிப்பாளையம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    செட்டிப்பாளையம் அருகே மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ரகுபதி(வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர் மொபட்டில் மலுமிச்சம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ரகுபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரகுபதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×