search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check fraud"

    நிலக்கோட்டை அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நிலக்கோட்டை:

    வேடசந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் பாலமுருகன் (வயது 41). இவருக்கு சொந்தமான வீடு நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில் உள்ளது. இந்த வீட்டில் ராஜதானியைச் சேர்ந்த வேல்முருகன் (48) என்பவர் ரூ.4 லட்சத்துக்கு ஒத்திக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த வீட்டை விற்க முடிவு செய்து பாலமுருகன் கடந்த 2016-ந் தேதி வீட்டை காலி செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார். அதற்கு வேல் முருகன் தானே இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறினார். ரூ.20 லட்சத்துக்கு விலை பேசி முதல் தவணையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலையை 18.5.16-ந் தேதி வேல்முருகன் கொடுத்துள்ளார்.

    அதனை 5 மாதங்கள் கழித்து வங்கியில் செலுத்தி பணம் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். 5 மாதங்கள் கழித்து வங்கியில் பணம் எடுக்க சென்ற போது அது திரும்பி வந்துள்ளது.

    இதனிடையே பால முருகனின் தந்தை சுப்புராஜ் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பாலமுருகன், வேல்முருகனிடம் சென்று கேட்டபோது உனது தந்தை சுப்புராஜிடம் பணத்தை கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

    அதற்கு எனக்கு தெரியாமல் என் தந்தை பணம் வாங்கி இருக்க மாட்டார் என உறுதியாக கூறினார். வேல் முருகனும் அவரது மனைவி வனிதாவும் பாலமுருகனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி.யிடம் பாலமுருகன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பண மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×