search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayaan3"

    • சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.
    • இந்நிகழ்வை பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்தபடி பார்வையிட உள்ளார் என தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

    இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது.
    • ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியுள்ளது.

    அந்த விண்கலம் வருகிற 23-ந்தேதி நிலவில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷியாவும் லூனா-25 என்ற விண்கலத்தை நாளை விண்ணில் ஏவ உள்ளது. 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர். ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது. நிலவின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    ×