search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone tower battery theft"

    செவ்வாப்பேட்டை அருகே உள்ள பகுதிகளில் செல்போன் கோபுரங்களில் இருந்து பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செவ்வாப்பேட்டை:

    செவ்வாப்பேட்டையை அடுத்துள்ள வேப்பம்பட்டு, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து பேட்டரிகள் திருட்டு போயின.

    இதுபற்றி வந்த புகார்களின் அடிப்படையில் செவ்வாய்பேட்டை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    நேற்று செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை நெருங்கினார்கள். ஆனால் அதற்குள் அவர் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில் அவருடைய பெயர் பால்ராஜ் (29) பட்டாபிராம் காந்தி நகரைச் சேர்ந்தவர். இவர்தான் செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடி வந்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    கைதான பால்ராஜை போலீசார் அழைத்துச் சென்று அவருடைய வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன் கோபுர பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்தனர். வாலிபர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? இதுவரை திருடிய பாட்டரிகள் எத்தனை? அவற்றை எங்கு விற்பனை செய்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    செஞ்சி அருகே செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் இருந்து டவர் சரியாக கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் இளநிலை தொடர்பு அலுவலர் சத்தியசீலன் தலைமையில் ஊழியர்கள் அந்த செல்போன் டவரை ஆய்வு செய்வதற்காக வந்தனர்.

    அப்போது அந்த டவரில் இருந்த பேட்டரிகளை திருடி 4 வாலிபர்கள் காரில் ஏற்றி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அதிகாரிகள் உடனே அவர்கள் 4 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தனர்.

    அந்த வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த அஜீத் (வயது20), பெங்களூரை சேர்ந்த கிரண் (22), கிஷோர் (21), சந்தோஷ் (21) என்பதும், இவர்கள் செல்போன் டவர்களில் உள்ள பேட்டரிகளை திருடியதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வந்த கார் மற்றும் திருடிய பேட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×