search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cattle smuggling"

    • தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
    • 10 கிலோ பறிமுதல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் சிக்னலில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    விசாரணையில், தர்மபுரி மாவட்டம் ராமகுண்டா அள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 51), ராஜா தோப்பு பகு தியை சேர்ந்த சிவா (வயது 33) என்பதும், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஒரு சாக்கு பையில் 10 கிலோ எடையுள்ள மான் கறியை தர்மபுரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்ப டைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மான் கறி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசத்தில் மாட்டை கடத்தி செல்வதாக கருதி 4 பேரை கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியபோது போலீசார் உடனடியாக விரைந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் புர்தில் நாகர் பகுதியில் நாக்ல மண்டாதி கிராமத்தில் அடிக்கடி மாடுகள் திருட்டு போனது. இதனால் உள்ளூர் மக்கள் விழிப்புடன் இருந்து கண்காணித்தனர்.

    இந்த நிலையில் இந்த கிராமத்தின் அருகே ஹத் ராஸ் என்ற இடத்தில் இறந்த எருமை மாட்டை 4 பேர் சேர்ந்து ஒரு வேனில் ஏற்றிச் சென்றனர். இதை அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாட்டை திருடி அடித்துக் கொன்று விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக கருதி 4 பேரையும் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்றனர். 4 பேரையும் மீட்க முயன்றபோது கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்துவதாகவும், அதில் மாடு திருடர்கள் என தெரிய வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த 4 பேரில் 2 பேர் முஸ்லிம்கள், 2 பேர் இந்துக்கள்.

    தக்க சமயத்தில் போலீசார் சென்றதால் 4 பேரும் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்கள் மாடு திருடர்களா? என விசாரணை நடந்து வருகிறது.
    ×