search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste conflict"

    • ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியிலான மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.
    • கவுன்சிலிங் குழுவானது மாணவர்களுக்கு சமத்துவம் குறித்த போதனையை வழங்கி வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    ஒரு சில பள்ளி, கல்லூரி களில் சாதி ரீதியிலான மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற பிரச்சனைகள், பள்ளி பருவத்திலேயே மாணவர்க ளின் மனதில் ஆழமாக பதியும் சாதி குறித்த தவறான எண்ணங்கள், உள்ளிட்ட வற்றை கலையும் வண்ணமாக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி களில் மாணவர்களிடையே அனைவரும் சமம் என்ற உணர்வை தோற்றுவிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு மாவட்டந்தோறும் ஒரு வேன் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட இந்த வேனில் சென்று ஒவ்வொரு அரசு பள்ளி யிலும் படிக்கும் மாணவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகைகள் செய்யப்பட்டி ருந்தது.

    இதற்காக அந்த வேனில் ஒரு யோகா ஆசிரியர், ஒரு ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்கு ஒரு கவுன்சிலிங் ஆசிரியர் என 3 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சிலிங் குழுவானது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அவ்வப்போது மாணவர்களுக்கு சமத்துவம் குறித்த போதனையை வழங்கி வந்தது.

    மேலும் தற்கொலை குறித்த எண்ணங்களை கைவிடுவதற்கு மாணவர்க ளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மிகச்சிறந்த ஆலோசனை மையமாக இந்த திட்டம் விளங்கி வந்தது.

    ஆனால் தற்போது அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அதற்காக பயன்படுத்தப்பட்ட வேன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டு காலமாக முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாங்குநேரியில் சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதேபோல் கடந்த வாரம் டவுனில் டியூசனுக்கு சென்று வந்த ஒரு சமுதாய மாணவன் மீது மற்றொரு சமுதாய மாணவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்படி ப்பட்ட சூழ்நிலையில் காட்சி பொருளாக மாறி உள்ள இந்த வேனை பள்ளிக்கல்வி த்துறை அதிகாரி கள் மீண்டும் பயன்படுத்தி அதற்கென ஒரு தனி குழுவையும் ஆரம்பித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று மாண வர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×