search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candidates assets"

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபை வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த வேட்பு மனுவில் 16 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என்பது தெரிய வந்துள்ளது. #MPAssemblyElection
    போபால்:

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. 4041 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த வேட்பு மனுவில் 16 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என்பது தெரிய வந்துள்ளது.

    இதில் பெரும்பாலானவர்கள் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரசை சேர்ந்தவர்கள். மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், கோடீசுவர வேட்பாளர்களாக உள்ளனர்.

    பா.ஜனதா மந்திரிகளான சஞ்சய் பதக்குக்கு ரூ.121 கோடியும், பூபேந்திரசிங்குக்கு ரூ.47 கோடியும், கோபால் பார்கவ்வுக்கு ரூ.3½ கோடியும் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்களான சேட்டன் காஷ்யப்புக்கு ரூ.120 கோடியும், சுரேந்திரா பட்வாவுக்கு ரூ.38 கோடியும், காயத்ரி ராஜுவுக்கு ரூ.27 கோடியும், மோகன் யாதவுக்கு ரூ.16 கோடியும், சைலேந்திர ஜெயினுக்கு ரூ.13 கோடியும் சொந்தமாக சொத்துக்கள் இருக்கின்றன.

    காங்கிரசை சேர்ந்த விஷால்படேல் (ரூ.69 கோடி), சஞ்சய்சர்மா (ரூ.65 கோடி), கே.பி.சிங் (ரூ.60 கோடி), அலோக்சதுர்வேதி (ரூ.26 கோடி), அஜய்சிங் (ரூ.25 கோடி), சச்சின் யாதவ் (ரூ.23 கோடி), அருண்தோயாசவுபே (ரூ.11 கோடி), துல்சி சில்வாத் (ரூ.5.68 கோடி) ஆகியோர் கோடீசுவர வேட்பாளர்கள் ஆவார்கள்.

    மிகவும் பின் தங்கிய மாநிலமான மத்திய பிரதேசத்தில் அரசியல்வாதிகள் மட்டும் கோடீசுவரர்களாக இருக்கிறார்கள். #MPAssemblyElection
    ×