என் மலர்
நீங்கள் தேடியது "Bus mirror"
- டிரைவரை ஆபாசமாக திட்டி தாக்கினார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த சின்னராஜ் என்பவர் வலதுபுறமாக உள்ள பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதனை தட்டிக் கேட்ட பஸ்சின் டிரைவர் மாதவனை ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இது சம்பந்தமாக அரசு பஸ் டிரைவர் மாதவன் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து, சின்னராஜை கைது செய்தார்.
- திருவெண்ணைநல்லூர் அருகே மாணவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.
- பஸ் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் பையூர் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் டிரைவர் ஓட்டிச் சென்றார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே கொங்கராயனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் கொண்டு சென்றது. பஸ் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் பையூர் பகுதியில் பஸ்சை நிறுத்தாமல் பஸ் டிரைவர் ஓடிச் சென்றார். இதனால் அந்த பகுதிகள் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் சிலர் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






