search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brain disease"

    • தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
    • மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பக்க தலைவலி பிரச்சினையால் உலகெங்கும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலையின் ஒரு பக்கத்தில் தான் இது பலருக்கு வரும். சில நேரங்களில் சிலருக்கு இரண்டு பக்கமும் வலி வருவதுண்டு. சாதாரணமாக வந்து சாதாரணமாக போய்விடும் இந்த ஒற்றைத் தலைவலி. சில சமயங்களில் 10 சுத்தியல், 10 சம்மட்டி போன்றவைகளைக் கொண்டு அடித்தால் ஏற்படுவது போன்ற மிகக் கடுமையான வலியை உண்டுபண்ணி, ஆளையே பிழிந்து எடுத்துவிடும்.

    உடலில் நீர்ச்சத்து குறைவு, அதிக மன அழுத்தம், அதிக தூர பயணம், போதுமான தூக்கமின்மை, சைனஸ் பாதிப்பு, மூளையில் நோய், மூளையில் கட்டி, அதிர்ச்சியான விஷயங்கள், அதிக களைப்பு, அதிக கோபம், மலச்சிக்கல் பிரச்சினை, அஜீரணம், கழுத்து எலும்பு பிரச்சினை, மூளைப் புற்றுநோய், பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வராமலிருத்தல், மாதவிடாய் சுத்தமாக நின்று விடுதல், தலையில் காயம் ஏற்படுதல், மது அருந்துதல், சரியாக சாப்பிடாமல் இருத்தல், பதப்படுத்தப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுதல், ஜலதோஷம், அலர்ஜி, சில மருந்துகளின் பக்க விளைவுகள், ரத்தசோகை, மூளைக் காய்ச்சல், பிடிக்காத சென்ட், பெயிண்ட் வாசனை, அதிக வெளிச்சத்தில் நீண்ட நேரம் நிற்பது, அதிக சத்தத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது, அதிக நேரம் செல்போன் பேசுவது - இது போன்ற இன்னும் பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.

    ஒற்றைத் தலைவலி அடிக்கடி வராமலிருக்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். பதற்றம், கோபம் கூடாது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்தமுள்ள இடத்தில் இருந்து தள்ளி வந்துவிட வேண்டும். அதிக ஒளியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.

    உங்கள் வாழ்நாளில் இதுமாதிரி ஒரு ஒற்றைத் தலைவலியை அனுபவித்ததில்லை என்று நீங்கள் உணர்ந்தால், வலி தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி எழுப்பிவிட்டால், அதிக குழப்பத்தினால் வலி வந்தால், அதிக காய்ச்சலோடு வலி வந்தால், கண் பார்வைக்கோளாறுடன் வலி வந்தால், கண் சிவந்து போய் கண் வலியோடு தலைவலி வந்தால், நினைவு இழந்து வலி வந்தால், உடனடியாக உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் மிகமிகச் சிறந்தது.

    தலைவலி தானே என்று முடிவு செய்து நீங்களாகவே மருந்து, மாத்திரை, கை வைத்தியம் பண்ணிக் கொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நோய்க்கான அறிகுறிதான். இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்தால் ஒற்றைத் தலைவலி காணாமல் போய்விடும்.

    மேலும் திடீர் தலைவலி, நாட்பட்ட தலைவலி, குமட்டல், கண் பார்வையில் மாற்றம், கால் மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, உணவின் மணத்தை உணர இயலாத தன்மை என பல்வேறு அறிகுறிகளை, நாள்பட்ட மற்றும் தற்காலிக ஒற்றை தலைவலியின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

     இத்தகைய பாதிப்பிற்கு நடைமுறையில் பல்வேறு நிவாரண சிகிச்சைகள் இருப்பினும், தற்போது 'கிரீன் லைட் தெரபி' என்ற சிகிச்சை, நாள்பட்ட ஒற்றைத் தலைவலி பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இத்தகைய சிகிச்சையை நாள்பட்ட ஒற்றைத்தலைவலி பாதிப்புக்குள்ளானவர்கள் பெறும் பொழுது, இத்தகைய பாதிப்பில் இருந்து அவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
    • விக்னேசுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.

    உடுமலை:

    உடுமலை பழனி ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32).இவர் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. விக்னேசுக்கு திடீரென மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் டாக்டர்கள் மூலமாக தானமாக பெறப்பட்டது.

    ×