search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bomber"

    • தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    • கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ உயர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த போது மழை பெய்து கொண்டிருந்தது.

    காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து தெரியவந்தும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வடக்கு பிராந்திய ராணுவ படை தலைமையகம் சார்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறும்போது, ஜெய்ஷ் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு உள்ளது.

    அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ உயர் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • முதியவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.
    • கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை ஆர்.ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது வீட்டின் அருகே சரவணன் என்ற சரவணகுமார் (28) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், 'ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்' என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.

    கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு முதியவர் சீனிவாசன் வீட்டில் தூங்கினார். அங்கு வந்த சரவணகுமார், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து சீனிவாசன் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் என்ற சரவணகுமாரை கைது செய்தனர்.

    • பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக வழக்கு

    மதுரை

    மதுரை கீழ் மதுரை, சி.எம்.ஆர் ரோடு, அரிஜன காலனியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் வெற்றிவேல் பாண்டி என்ற டங்காரு (வயது 22). இவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வெற்றிவேல் பாண்டி மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

    எனவே வெற்றிவேல் பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி வெற்றிவேல் பாண்டி என்ற டங்காருவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்து உள்ளனர்.

    ×