என் மலர்
நீங்கள் தேடியது "BJP working committee"
- வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் பொது வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ் கோத்தகிரி தலைவர் விஜய் குமார் மற்றும் பெள்ளி தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஜெ. குமார், மண்டல் பொது செயலாளர்கள் ரமேஷ், கிருஷ்ணா குமார் மற்றும் மண்டல் அணி தலைவர்கள், கிளை தலைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.






