என் மலர்
நீங்கள் தேடியது "bjp parliament election"
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் அதிமுக, பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #parliamentelection
கரூர்:
கரூரில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தெருமுனை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தான்,சீனா நாடுகள் இந்திய ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். அந்த பணம் தான் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசு தீவிரமாக கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நான் பாராட்டுகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கையை தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.
எனக்கு தெரிந்தவரை பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க. வுடன் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. மேலும் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #parliamentelection






