என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Benefits of exercise"

    • உடற்பயிற்சி பெண்களுக்கு அழகான உடலமைப்பை அளிக்கிறது.
    • எப்போதுமே `பாசிட்டிவ் அப்ரோச்’ தான் நல்ல பலனை அளிக்கும்.

    உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். நாம் அழகாகவே இல்லை, குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே `பாசிட்டிவ் அப்ரோச்' தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

    நம் உடலில் எங்கெங்கு குறை இருக்கிறதோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும், மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

    உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது. ரத்த ஓட்டம் சீராகி, புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான். இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

     வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும். பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான். மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

    நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலை அலங்காரம், ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர், முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஆடையை பொறுத்தவரை அனைவருக்குமே `ட்ரெஸ்சிங் சென்ஸ்' இருப்பது அவசியம். அனைவருமே ஆடை வாங்குகிறார்கள். உடுத்திக்கொள்கிறார்கள்.

    ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு `கிரியேட்டிவ்சென்ஸ்' இருக்கும். அதுதான் அவர்களது `ஸ்பெஷாலிட்டியே'.

    நம்மாலும் அந்த கிரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும், பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

    குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தால் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

    கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட், டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும். மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

    உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும்.

    • இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
    • ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.

    இயற்கையை நேசிப்பவர்கள் நிச்சயம் மலையேற்றம் செய்வதற்கு ஆசைப்படுவார்கள். அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதி வழியே நடந்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி, இயற்கை அழகை ரசித்தபடி மலை மீது ஏறும் அந்த பயணம் ஆனந்த அனுபவத்தை கொடுக்கும். கூடவே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான நன்மைகளை பெற்றுத்தரும். அவற்றுள் சில...


    1. இதய ஆரோக்கியம்

    'ஹைகிங்' எனப்படும் மலையேற்றம் செய்வது இதயத்துக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும், உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதையும் மேம்படுத்தும். இதய நோய் அபாயத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

    2. தசை

    மலையேற்றத்தின்போது பயணிக்கும் நிலப்பரப்பின் தன்மையை பொறுத்து தசைகளுக்கு கிடைக்கும் நன்மை மாறுபடும். மலையின் உச்சிப்பகுதியை நோக்கி ஏறும்போது தொடையின் தசை பகுதிகள், முழங்கால்களின் பின் பகுதி தசைகள், இடுப்பின் பின் பகுதி தசைகள் வலுவடையும். மலையில் இருந்து கீழ் நோக்கி இறங்கும்போது இடுப்பு, முழங்கால்கள், முதுகு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வலுப்பெறும்.

    3. எடை மேலாண்மை

    கலோரிகளை எரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மலையேற்றம் சிறந்த வழிமுறையாக அமையும். எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையானது மலையேறும் பாதையில் எதிர்கொள்ளும் சிரமம் மற்றும் மலையேறுபவரின் உடல் எடையை பொறுத்து மாறுபடும்.


    4. எலும்பு அடர்த்தி

    மலையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது எலும்புகளை பராமரிக்கவும் உதவும். உயரமான, தாழ்வான, மேடான, பள்ளமான என பல்வேறு நிலப்பரப்புகளில் நடப்பதால் ஏற்படும் அழுத்தமும், நெகிழ்வுத்தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். எலும்பு வளர்ச்சியையும் தூண்டும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

    5. மனநலம்

    இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்கும். மலைப்பிரதேசங்களில் நடந்தபடி நேரத்தை செலவிடுவதும், அங்கு நிலவும் அமைதியான சூழலும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இந்த ஹார்மோன் ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்த வழிவகுக்கும்.


    6. சமநிலை

    மலைப்பகுதி போன்ற சீரற்ற நிலப்பரப்புகளில் நடப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சமநிலையை பேண உதவிடும். திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவிடும்.

    குறிப்பாக வயதானவர்களுக்கு அதிக பலனை கொடுக்கும்.

    7. சுத்தமான காற்று

    இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதும், உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதிலும் மலையேற்றம் செய்யும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

    இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைப்பதற்கும் துணை புரியும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க இது அவசியம்.

    ×