search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladeshi teenager"

    • வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர்.
    • போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார்.

    கோவை,

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணியளவில் ஏர் அேரபியா விமானம் வந்தது.

    விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அந்த பாஸ்போர்ட் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் இருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரிய வந்தது.இது குறித்து அதிகாரிகள் அந்த வாலிபர் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அந்த வாலிபர் தான் இந்தியன் எனவும், தனது சொந்த மாநிலம் மேற்குவங்கம் என கூறினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபருக்கு பாட தெரியவில்லை.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேச நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது 28) என்பது தெரிய வந்தது.

    டெய்லரான இவர் முதலில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் மீண்டும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்தது தெரிய வந்தது.

    போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீ சாரிடம் ஒப்படை த்தனர். போலீசார் அவர் மீது வெளி நாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×