என் மலர்

  நீங்கள் தேடியது "Bangladesh Premier League"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்டீவ் ஸ்மித் வங்காள தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுள்ளது வங்காள தேச கிரிக்கெட் போர்டு #Smith #BPL
  பால் டேம்பரிங் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதித்துள்ளது. இதனால் பிரிமீயர் லீக் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார். வங்காள தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்காக கொமிலா விக்டோரியன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.

  இதற்கு மற்ற அணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்க வங்காள தேச கிரிக்கெட் போர்டு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் ஸ்மித் மீதான தடையை இன்று நீக்கியுள்ளது.

  இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் போர்டு கூறுகையில் ‘‘மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாங்கள் முதலில் அனுமதி கொடுக்கவில்லை. இன்று நான்கு அணிகள் தனித்தனியாக, அவர்கள் தெரிவித்த எதிர்ப்பை திரும்பப் பெறுவதாக மெயில் அனுப்பியுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிசிபி தடைவிதித்துள்ளது. #BPL #BCB
  வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் வங்காளதேசம் பிரிமீயர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது. அடுத்த சீசன் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான கொமிலா விக்டோரியன்ஸ் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை ஏலத்தில் எடுத்திருந்தது.

  சோயிப் மாலிக் தொடரின் மத்தியில் சர்வதேச அணிக்கு திரும்ப இருக்கிறார். இதனால் கொமிலா விக்டோரியன்ஸ் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

  இந்நிலையில் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் ஸ்மித் விளையாடுவதற்கு வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தடைவிதித்துள்ளது.  இதுகுறித்து பிசிபி தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘வங்காள தேசம் பிரிமீயர் லீக்கின் விதிப்படி, ஒரு அணி மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அவருடைய பெயர் வீரர்களின் ஏலத்திற்கான தொடக்க வரைவு பட்டியலில் இடம்பெற வேண்டும். ஆனால், ஸ்மித் பெயர் தொடக்க வரைவில் இல்லை.

  ஸ்மித் விளையாடுவதற்கு சில அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகவே, நாங்கள் வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட அவருக்கு தடைவிதித்துள்ளோம்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓராண்டு தடை பெற்றுள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்மித், வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Smith #BPL
  ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்களின் சங்கங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை எழுந்தது.

  ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுத்துவிட்டது. சர்வதேச மற்றும் உள்ளூர் முதன்மையான தொடரில் விளையாட தடைவித்ததால், ஸ்மித்திற்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைத்துள்ளது. இதனால் தற்போது புகழ்பெற்று வரும் டி20 லீக்கில் களம் இறங்க முடிவு செய்தார்.

  அதன்படி கனடா மற்றும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  வங்காளதேசம் பிரிமீயர் லீக்கில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் மூத்த வீரர் சோயிப் மாலிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது. இதனால் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘‘நாங்கள் ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் நான்கு போட்டிக்குப்பிறகு அணியில் இணைவார் என்று நம்புகிறோம்’’ என்று அந்த அணி தெரிவித்துள்ளது.

  மற்றொரு வீரரான டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்த தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘360 டிகிரி’ என்ற அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடுகிறார். #ABDVilliers
  தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேவேளையில் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்தார்.

  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் லீக் போட்டிகளில் விளையாடும் வகையில் அவருக்கு நேரம் கிடைத்தது. இதனால் முதன்முறையாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் வங்காள தேச பிரீமியர் லீக் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரங்பூர் ரைடர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியில் ஏற்கனவே கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

  மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை விளாசும் திறமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன டேவிட் வார்னர் வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #BPL #DavidWarner
  ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய வழக்கில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

  இதனால் டேவிட் வார்னர் கரிபியன் பிரீமியர் லீக்கில் விளையாடினார். தற்போது உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் விளையாடி வருகிறார்.  இந்நிலையில் வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் வங்காள தேசம் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். டேவிட் வார்னர் சியல்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

  ஏற்கனவே சியல்ஹெட் நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான சந்தீப் லாமிச்சேனை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணியில் வங்காள தேசத்தைச் சேர்ந்த லிட்டோன் தாஸ், சபீர் ரஹ்மான், நசிர் ஹொசைன், பாகிஸ்தானைச் சேர்ந்த சோஹைல் தன்விர் ஆகியோர் உள்ளனர்.
  ×