search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ballot paper"

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    நிஜாமாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 200க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை முடிந்து மனுக்களை வாபஸ் பெறுவது நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 185 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இவ்வாறு அதிக அளவிலான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.



    இந்த தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்பியாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் மது யாஷ்கி கவுடா, பாஜக சார்பில் தர்மபுரி அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இதற்கு முன்பு 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, நல்கொண்டா மாவட்டத்தில் புளோரைடால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, 480 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது.

    ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும். ஒரு கண்ட்ரோல் யூனிட்டுடன் 4 இயந்திரங்களை இணைக்கலாம். எனவே நோட்டாவுடன் சேர்த்து 64 வேட்பாளர்களின் பெயர்களை சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Nizamabad #BallotPaper
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி உள்ளனர். #Parliamentelection
    புதுடெல்லி:

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



    நேற்று முன்தினம் கூட அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக ஆதரவை திரட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த 17 எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரக் ஓபிரையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். மேலும் தேர்தல் கமிஷனிலும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’ என்று கூறினார்.

    வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவளிக்குமாறு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவிடமும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். அந்த கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரேயும் வாக்குச்சீட்டு முறைக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Parliamentelection
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் காகித பயன்பாடு குறைவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தல் உள்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் வரை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.



    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    பாராளுமன்ற தேர்தலை மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என லக்னோவில் இன்று நடைபெற்ற சமாஜ்வாதி கட்சி பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. #SPNationalExecutivemeeting #LSpolls
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் லக்னோ நகரில் இன்று நடைபெற்று வருகிறது. அம்மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக  வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. #SPNationalExecutivemeeting #LSpolls #LSpollsthroughballotpaper

    ×