search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
    X

    பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி உள்ளனர். #Parliamentelection
    புதுடெல்லி:

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



    நேற்று முன்தினம் கூட அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக ஆதரவை திரட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த 17 எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரக் ஓபிரையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். மேலும் தேர்தல் கமிஷனிலும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’ என்று கூறினார்.

    வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவளிக்குமாறு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவிடமும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். அந்த கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரேயும் வாக்குச்சீட்டு முறைக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Parliamentelection
    Next Story
    ×