search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "babar asam"

    • நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து முடிவு.
    • டி20 போட்டி, டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன்களை அறிவித்தது பாகிஸ்தான்.

    கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இன்று மாலை பாபர் ஆசாம் அறிவித்திருந்தார்.

    நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார்.

    "இது கடினமான முடிவு, ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன்" என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்களை அதன் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ×