search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "At Cost"

    • உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 15.12. 2000 அன்று முதல்வராக இருந்த கருணா நிதியால் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 1.9.1998 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்ற னர். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் 2 வகை யான அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1.9.2010 முதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது .

    கடந்த 2015 நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்காமல் முடக்கப்பட்டது. நவம்பர் 2015 முதல் முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 2.9.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அகவிைைலப்படி உயர்வை நவம்பர் 2022 வழங்கவும். அமல்படுத்திய அறிக்கையை 25.11.2022ல் கோர்ட்டில் தாக்கல் செய்ய வும் உத்தரவிட்டது.

    தமிழக அரசு இந்த பிரச்சினையில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கை கடைபிடிப்பதை கண்டித்து மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில சம்மே ளன துணைத்தலைவர் பிச்சை உள்பட பலர் பேசினர்.

    இதில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முருகேசன். சவுரி தாஸ், ஆறுமுகம், செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ஜேம்ஸ் கர்சன்ராஜ், ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பழம், போஸ், முத்துச்சாமி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் மகாலிங்கம், காமராஜ், நாகராஜன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகம் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்.

    • 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும்.
    • காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தஞ்சை மாவட்டம் சார்பில் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    1-7-2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு உடனே வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும்,70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் விரைவாக வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராஜன் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

    ×