search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrive"

    டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள பிரதமர் மோடி பதவியேபு விழாவில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தந்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள பிரதமர் மோடி பதவியேபு விழாவில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, மியான்மர் அதிபர் யூ வின் மிண்ட், பூடான் பிரதமர் லோடே ஷெரிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். 
    அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.

    அவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர்.

    அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
    ×