search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ancient temples"

    • உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது
    • வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்

    உடுமலை :

    உடுமலை அருகே அமராவதி ஆற்றங்கரையில், பழமையான கோவில்கள் ஏராளம் உள்ளது. இங்குள்ள கோவில்கள், கல்வெட்டு குறித்து பழனியாண்டவர் பண்பாட்டு கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு பயணம் செய்தனர்.பேராசிரியர்கள் சித்ரா, மேகலா தலைமையில் 30க்கும் மேற்பட்ட வரலாற்று ஆய்வு மாணவர்கள், ஐவர் மலை, மதகடிபுதூர் பாறை ஓவியங்கள், கொழுமம் வீரசோழீஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், கணியூர் கோட்டை ஈஸ்வரன் கோவில், கடத்தூர் சித்திரமேழி பெரியநாட்டார் கல்வெட்டு, கொங்கு விடங்கீஸ்வரர் கோவில் மற்றும் மருதீசர் கோவில்களில் அனைத்து கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

    உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ தலைவர் மதியழகன், ஐவர் மலையில் சமண வழிபாடு குறித்தும், 16 தீர்த்தங்கரர்கள் வாழ்விடம்,திரவுபதி வழிபாடு குறித்தும் விளக்கமாக பேசினார்.வக்கீல் சத்தியவாணி சமணம் சார்ந்து இருந்த அப்பாண்டையர் மலை தற்போது பாண்டவர் மலையாகவும், ஐவர் மலை என வழக்கில் மாறி இருப்பதையும் வீரநாராயணப் பெருவழி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிப்பேசினார்.கொமரலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, சித்திரமேழி ஏர், பாறை ஓவியங்கள் குறித்து பேசினார். மதகடிபுதூர் பாறை ஓவியங்கள் குறித்து முனைவர் விஜயலட்சுமி விளக்கமளித்தார்.கடத்தூரில் உள்ள சித்திரமேழி பெரிய நாட்டார் கல்வெட்டு சிறப்புகளையும், அங்கு கோட்டைகள் இருந்தது, கரை வழி நாட்டு கடத்தூர் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.கடத்தூர் மருதீசர் கோவிலில் உள்ள 84 கல்வெட்டு மற்றும் அதன் செய்திகள் குறித்து விளக்கி வரலாற்று ஆய்வாளர்கள் பேசினர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
    • திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் அமராவதி மற்றும் உப்பாறு படுகையில் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.இதில் சில கோவில்கள் போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு நீண்ட காலமாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலில், இந்து அறநிலையத்துறை உதவிப்பொறியாளர் அருள், செயல் அலுவலர் சங்கீதா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறியதாவது:- பழங்கால கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.தொல்லியல்துறை மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கோவில்களில் நேரடி ஆய்வு செய்துள்ளனர்.

    அவர்கள் வழங்கும் வழிகாட்டுதல் அடிப்படையில், கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவிலை புதுப்பிக்க அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. திருப்பணிக்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி பல கட்டமாக நடந்து வருகிறது.திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்த பிறகு நன்கொடைதாரர்கள் பங்களிப்புடன் விரைவில் திருப்பணிகள் துவங்கும். கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், தற்காலிக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து கோவில்களின் அருகிலும் கோவிலுக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    ×