search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alamgir Alam"

    • நேற்று 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.
    • இன்று 2-வது நாள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலம் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக உள்ளார்.

    ஆலம்கீர் ஆலமின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் அவருடைய வீட்டு உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது ரூ. 37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து ஆலம்கீர் ஆலம் மீது அமலாக்கத்துறை ஒரு கண் வைத்திருந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) ஆலம்கீர் ஆலம் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரது அறிக்கையை பதிவு செய்து கொண்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை மேற்கொண்டது. சுமார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அமலாக்கத்துறை ஆலம்கீர் ஆலம்-ஐ கைது செய்துள்ளது.

    • சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.
    • நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர், அலம்கீர் ஆலம். காங்கிரசை சேர்ந்த இவரது தனி செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது மந்திரி அலம்கீர் ஆலமை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×