search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhand Minister"

    • சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.
    • நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர், அலம்கீர் ஆலம். காங்கிரசை சேர்ந்த இவரது தனி செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது சஞ்சீவ் குமார் லாலின் வீட்டு வேலைக்காரர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டில் இருந்து ரூ.32 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது மந்திரி அலம்கீர் ஆலமை நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யபப்ட்டது.
    • இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை.

    சென்னை:

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி ஜகர்நாத் மகதோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

    கொரோனானால் பாதிக்கப்பட்ட ஜெகர்நாத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யபப்ட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை. கடந்த மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    மகதோ மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×