என் மலர்
நீங்கள் தேடியது "Agni"
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
- காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது.
- இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம்த்தில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்கரப்பட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சக்கரப்பட்டி சித்தர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.






