என் மலர்
நீங்கள் தேடியது "actress keerthy suresh"
- ஒரு மலையாள படத்தில் நடிக்கத்தான் எனக்கு முதல் வாய்ப்பு வந்தது.
- என்னை ஒப்பந்தம் செய்தால் படம் நின்று விடும் என்று கூறினர்.
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், "நான் ஆரம்ப காலத்தில் சினிமாவில் அடியெடுத்த நாட்களை இப்போது நினைத்தால் வேதனையாக இருக்கும். சில நேரம் சிரிப்பும் வரும்.
ஒரு மலையாள படத்தில் நடிக்கத்தான் எனக்கு முதல் வாய்ப்பு வந்தது. நானும் அம்மா மாதிரி நடிகையாக போகிறேன் என்ற மகிழ்ச்சியோடு சென்றேன்.
ஆனால் அந்த படம் நின்று விட்டது.அதன்பிறகு இன்னும் இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்த படங்களும்கூட இடையிலேயே நின்று விட்டன.
இதனால் என்னை ராசியில்லாத நடிகை என்று எல்லோரும் சொன்னார்கள். என்னை ஒப்பந்தம் செய்தால் படம் நின்று விடும் என்றும் பிரசாரம் செய்தனர். நான் முயற்சியை கைவிடவில்லை. மெல்ல மெல்ல என்னை மெருகேற்றி தொடர்ந்து படங்களில் நடித்து தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தேன்.
இப்போது நிறைய நல்ல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருந்தாலும் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட விமர்சனங்கள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து வேதனைப்படுத்துகின்றன" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.
- கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என படுபிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
15 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.
இதில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். விஜய் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் திருமணத்தில் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களுகடன், " எங்களின் கனவு நபர் எங்களின் கனவு திருமணத்தில் வாழ்த்தியபோது.. அன்புடன் உங்கள் நண்பி மற்றும் நண்பா" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






