search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar Service Center"

    • தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது
    • அலுவலகத்தில் இதற்கான ஆதார் ேசவை மையம் செயல்படுகிறது.

    திருப்பூர் : 

     இந்திய அஞ்சல் துறை யூ.ஐ.டி.ஏ.ஐ. உடன் இணைந்து புதிய ஆதார் எடுத்தல், ெபயர் திருத்தம், முகவரி மாற்றம் தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. திருப்பூர் ரெயில்வே சந்திப்பு வளாகத்தில் இயங்கி வரும் திருப்பூர் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் இதற்கான ஆதார் ேசவை மையம் செயல்படுகிறது. இந்த மையம் கடந்த 31-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ேசவை மாலை நேரத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக்ெகாள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கோவை கோட்ட ஆர்.எம்.எஸ். முதுநிலை கண்காணிப்பாளர் அகில் ஆர்.நாயர் தெரிவித்துள்ளார்.

    • திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்படவில்லை.
    • இதனால் பொது மக்கள் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். இதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முக்கிய ஊராக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி திருப்புவனத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திருப்பு வனம் பேரூ ராட்சியில் நாள்தோறும் ஆதார் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட வில்லை. இதனால் பொது மக்கள் மாணவ-மாணவி கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்கும் அல்லது வேறு சேவை மையங்க ளுக்கும் சென்று ஆதார் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    திருப்பு வனம் தபால் நிலையத்தில் ஆதார் மையத்தை செயல்படுத்தி கூடுதலாக அஞ்சல் அலுவலர்களை நியமித்து கூடுதல் நேரத்தில் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×