தபால் நிலையத்தில் செயல்படாத ஆதார் சேவை மையம்

திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்படவில்லை. இதனால் பொது மக்கள் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.
தபால் நிலையத்தில் செயல்படாத ஆதார் சேவை மையம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். இதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முக்கிய ஊராக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி திருப்புவனத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திருப்பு வனம் பேரூ ராட்சியில் நாள்தோறும் ஆதார் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட வில்லை. இதனால் பொது மக்கள் மாணவ-மாணவி கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்கும் அல்லது வேறு சேவை மையங்க ளுக்கும் சென்று ஆதார் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

திருப்பு வனம் தபால் நிலையத்தில் ஆதார் மையத்தை செயல்படுத்தி கூடுதலாக அஞ்சல் அலுவலர்களை நியமித்து கூடுதல் நேரத்தில் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com