search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW Motorrad"

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 100 Years எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது.
    • பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் 100 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. தனது 100 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை - பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி 100 Years மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 18 100 Years என அழைக்கப்படுகின்றன.

    சர்வதேச சந்தையில் பிஎம்டபிள்யூ ஆர்32 வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், இரு மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய லிமிடெட் எடிஷன் மாடல்களில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரு மாடல்களும் சர்வதேச அளவில் 1923 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

     

    பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரோட்ஸ்டர் மாடலில் 1170 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, இரண்டு சிலிண்டர்கள் கொண்ட பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 ஹெச்பி பவர், 116 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 221 கிலோ எடை கொண்டிருக்கும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    100 Years எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் டோன் பென்ச் சீட் உள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ ஆர் 18 குரூயிசர் மாடலில் 1800 சிசி ஏர்/ஆயில் கூல்டு இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 4-ஸ்டிரோக் பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 91 ஹெச்பி பவர், 158 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக் 345 கிலோ எடை கொண்டிருக்கிறது. மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதன் விலை ரூ. 25 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு பிஎம்டபிள்யூ ரிகால் பற்றி தகவல் அனுப்பி வருகிறது.

    பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RT மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட யூனிட்களை ரிகால் செய்கிறது. ரிகால் நடவடிக்கை வட அமெரிக்க சந்தையில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் உடையும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், மோட்டார்சைக்கிள்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

    பாதிக்கப்பட்ட யூனிட்களில் உள்ள கியர்பாக்ஸ் இன்புட் ஷாஃப்ட் ஓவர்லோட் ஆகி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பின்பற சக்கரத்தை நிறுத்தி விடும். இதன் காரணமாக விபத்து மற்றும் காயம் ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும். இம்முறை 18 ஆயிரத்து 489 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

    பிஎம்டபிள்யூ R 1250 GS 6 ஆயித்து 812 யூனிட்கள்

    பிஎம்டபிள்யூ R 1250 GS அட்வென்ச்சர் 9 ஆயிரத்து 401 யூனிட்கள்

    பிஎம்டபிள்யூ R 1250 RT 2 ஆயிரத்து 276 யூனிட்கள்

    குறிப்பு: பாதிக்கப்பட்ட யூனிட்கள் 2019 முதல் 2023-க்குள் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. மேலும் ரிகால் சர்வீஸ் செய்ய அருகாமையில் உள்ள பிஎம்டபிள்யூ விற்பனையாளரை தொடர்பு கொள்ளும் பிஎம்டபிள்யூ கேட்டுக் கொண்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட யூனிட்களில் பிஎம்டபிள்யூ விற்பனையாளர்கள் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் மென்பொருளை அப்டேட் செய்து வழங்க இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019 முதல் 2023 வரை உற்பத்தி செய்யப்பட்ட R 1250 GS, R 1250 GS அட்வென்ச்சர் மற்றும் R 1250 RTP மாடல்களின் விற்பனையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் புதிய G சீரிஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இது அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் தனது புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR இந்தியாவில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.


    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலிலும் அபாச்சி RR 310 மாடலில் உள்ளதை போன்றே 313சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன், டிராக், ஸ்போர்ட் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் வழங்கப்பட இருக்கும் டெயில் லைட், மிரர், விண்ட் ஸ்கிரீன் போன்ற பாகங்கள் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மற்றும் கே.டி.எம். RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    ×