search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இந்திய சந்தையில் ஸ்பெஷல் எடிஷன் பைக் மாடல்களை அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ
    X

    இந்திய சந்தையில் ஸ்பெஷல் எடிஷன் பைக் மாடல்களை அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 100 Years எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது.
    • பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் 100 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. தனது 100 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை - பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி 100 Years மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 18 100 Years என அழைக்கப்படுகின்றன.

    சர்வதேச சந்தையில் பிஎம்டபிள்யூ ஆர்32 வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், இரு மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய லிமிடெட் எடிஷன் மாடல்களில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரு மாடல்களும் சர்வதேச அளவில் 1923 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

    பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ரோட்ஸ்டர் மாடலில் 1170 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, இரண்டு சிலிண்டர்கள் கொண்ட பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 ஹெச்பி பவர், 116 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 221 கிலோ எடை கொண்டிருக்கும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    100 Years எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் டோன் பென்ச் சீட் உள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடலின் விலை ரூ. 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ ஆர் 18 குரூயிசர் மாடலில் 1800 சிசி ஏர்/ஆயில் கூல்டு இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 4-ஸ்டிரோக் பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 91 ஹெச்பி பவர், 158 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக் 345 கிலோ எடை கொண்டிருக்கிறது. மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதன் விலை ரூ. 25 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×