search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcaraz"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 38-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த லாஸ்லோ ஜெரியை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த ஜோகோவிச், அதன்பிறகு தனது அனுபவ ஆட்டத்தின் துணையுடன் சரிவில் இருந்து அபாரமாக மீண்டதுடன் வெற்றியையும் தன்பக்கம் திருப்பினார்.

    சுமார் 3 மணி 45 நிமிடம் நீடித்த இந்தப் போராட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டான் ஈவான்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் நாளையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 2-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் மெக்ஸ் பர்செலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டை 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், உலகின் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-0 6-4 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஹர்காக்ஸ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் 3வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நபர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6 (8-6), 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • அல்காரஸ் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    20 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதன்மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற அல்காரஸ் பேசுகையில், ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம். அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தோல்விக்கு பிறகு ஜோகோவிச் பேசுகையில், வெற்றி பெற்ற அல்காரசுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான வீரரிடம் தோல்வி அடைந்துள்ளேன். தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

    ஜோகோவிச் விம்பிள்டனில் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரபேல் நடால் தற்போது 13-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

    லண்டன்:

    அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் கைப்பற்றினார்.

    இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இந்த தரவரிசை பட்டியலில் கார்லோஸ் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார். நோவக் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.

    சிட்சிபாஸ் மூன்றாமிடமு, காஸ்பர் ரூட் நான்காம் இடமும், மெத்வதேவ் 5ம் இடமும் பிடித்துள்ளனர்.

    தரவரிசையின் முதல் 10 இடன்களில் இருந்து முதல் முறையாக ரபேல் நடால் வெளியேறியுள்ளார். அவர் தற்போது 13ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இதில் மெத்வதேவை வீழ்த்திய அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் அல்காரஸ் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் இறுதிக்கு முன்னேறினர்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் அல்காரஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும்.
    • இவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமை பெற்றார்

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூரை சந்தித்தார்.

    இதில் அல்காரஸ் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ 131 ஆட்டங்களில் 100-வது வெற்றியை அடைந்து முதலிடத்தில் உள்ளார்.

    ×