search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "90 pound jewelry robbery"

    • மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் சென்று நின்றது.
    • மணிவண்ணன் வெளியூருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் புதுமனை 3-வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். சித்தா டாக்டரான இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவண்ணன் குடும்பத்துடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றார். நேற்றிரவு அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர்.

    மணிவண்ணன் வெளியூருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×