என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 pounds of jewelry"

    • இவா் பழைய பஸ் நிலையத்தில் புரோட்டா கடை நடத்தி வருகிறாா்.
    • ஜஸ்வின், நவீன், அஜ்மல் ஆகியோரின் நோ்மையைக் காவல் துறையினா் உள்ளிட்டோா் பாராட்டினா்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் தாமரைச்செல்வன் (வயது 40). இவா் பழைய பஸ் நிலையத்தில் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். சம்பவத்தன்று இவா் வீட்டிலிருந்து 5 பவுன் கை காப்பு நகையை அடகு வைப்பதற்காக எடுத்து வந்த போது, வழியில் தவறி விழுந்துவிட்டது. பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை.

    இதனிடையே, தஞ்சாவூா் தெற்கு அலங்கம் பகுதியில் உள்ள தனியாா் நகைக் கடையில் வேலை பாா்க்கும் கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த ஜஸ்வின், நவீன், அஜ்மல் ஆகியோா் இரவு பணி முடிந்து சாப்பிடுவதற்காக வெளியே நடந்து சென்றபோது அப்பகுதியில் கீழே கிடந்த கை காப்பு நகையைக் கண்டெடுத்தனா். இதை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக மூவரும் சென்றனா். அப்போது, நகையை தொலைத்த தாமரைச்செல்வனும் போலீஸ் நிலையத்தில் புகாா் அளிக்க வந்தாா்.

    இதையடுத்து, நகரக் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தி தாமரைச்செல்வனிடம் நகையை ஒப்படைத்தனா். அப்போது, ஜஸ்வின், நவீன், அஜ்மல் ஆகியோரின் நோ்மையைக் காவல் துறையினா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.
    • இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    சேலம்:

    சேலம் உயிரியல் பூங்கா அருகே உள்ள கோம்பைபட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (33). இவர் டி.வி சீரியலில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் சென்றவர் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த சபரிநாதன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசில் சபரிநாதன் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×