search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4th drinking water project"

    • திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு நிதியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
    • அம்ரூத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு நிதியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மொத்தம் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதில் 23 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள ஐந்து பணிகளில் இம்மாதம் டவுன்ஹாலில் கட்டப்படும் மாநாட்டு அரங்கம் மற்றும் பஸ் நிறுத்தம் எதிரே தினசரி மார்க்கெட் ஆகிய இரண்டு பணிகளையும் இம்மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் நொய்யல் கரை சீரமைப்பு பணி முடிவடையும். காயிதே மில்லத் நகர், சின்னான் நகர் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

    எனவே இவ்விரு பணிகளையும் செப்டம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அம்ரூத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட்சிட்டி அம்ரூத் திட்ட பணிகளை முடிக்க முனைப்பு காட்டி வருகிறோம். 4-வது குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திட்டம் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக விலகிவிடும்.

    இவ்வாறு பவன்குமார் கூறினார்.

    • வீட்டு இணைப்புகளில் குடிநீர் சப்ளையாகிறது
    • கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சிக்கு அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வடக்கு பகுதியில் வீட்டு இணைப்புகளில் குடிநீர் சப்ளையாகிறது. தெற்கு பகுதியில் கடந்த மாதம் 15ந் தேதி வெள்ளோட்டம் துவங்கியது. அதன்பின் பகுதி வாரியாக தொட்டிகளில் நிரப்பி சோதனை நடந்து வருகிறது. சில பகுதிகளில் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது எனவே 4-வது திட்ட குடிநீர் விரைவில் சப்ளை துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    குடிநீர் திட்டப்பகுதியிலிருந்து தற்போது 6 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. பகுதிவாரியாக பிரித்து தொட்டிகளில் ஏற்றப்படுகிறது. கட்டுமானம் நிறைவடையாத தொட்டி தவிர புதிதாக கட்டிய மற்றும் பயன்பாட்டில் உள்ள தொட்டிகளில் வெள்ளோட்டம் முடிந்து குடிநீர் சப்ளையாகிறது.தெற்கு பகுதியில் 3-வது பிரிவில் 12 தொட்டிகளில் 7, 4-வது பிரிவில் 22 தொட்டிகளில் 9 தொட்டிகளில் தற்போது வெள்ளோட்டம் நிறைவடைந்து சப்ளை துவங்கியுள்ளது.மீதமுள்ள கட்டுமானம் முடிந்த தொட்டிகள் அனைத்திலும் 15ந் தேதிக்குள் தண்ணீர் ஏற்றப்படும். வினோபா நகர் தொட்டி பகுதியில் நிலவிய தட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 3 வது திட்டக்குடிநீர் நேரடியாக் செல்லும்படி மாற்றுத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அப்பகுதியில் இனி தட்டுப்பாடு வராது. இதற்கு முன் 15 நாள் என்ற அளவிலிருந்த குடிநீர் சப்ளை தற்போது 3 முதல் 5 நாள் என்ற அளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. சப்ளையில்லாத பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். 

    ×