4-வது குடிநீர் திட்டம் மூலம் திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு நிதியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.அம்ரூத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசு நிதியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மொத்தம் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதில் 23 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள ஐந்து பணிகளில் இம்மாதம் டவுன்ஹாலில் கட்டப்படும் மாநாட்டு அரங்கம் மற்றும் பஸ் நிறுத்தம் எதிரே தினசரி மார்க்கெட் ஆகிய இரண்டு பணிகளையும் இம்மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் நொய்யல் கரை சீரமைப்பு பணி முடிவடையும். காயிதே மில்லத் நகர், சின்னான் நகர் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

எனவே இவ்விரு பணிகளையும் செப்டம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அம்ரூத் திட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட்சிட்டி அம்ரூத் திட்ட பணிகளை முடிக்க முனைப்பு காட்டி வருகிறோம். 4-வது குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. திட்டம் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக விலகிவிடும்.

இவ்வாறு பவன்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com